கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வரே –
விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.
விளக்கம்.
கல்லைப் பிளந்தால் திரும்பவும்
ஒட்டாததுபோல கயவர் ஒருவரிடம் கடுஞ்சினத்தால் பிரிந்தால் பிறகு கூட மாட்டார்கள்.
பொன்னைப் பிளந்தால் திரும்பவும் வேறு ஒருவரின் தயவுடன் கூடுவது போல் நடுதரத்தவர்
கூடுவர். வில்லைப்பிடித்து நீரில் கிழிக்க, நீரானது உடனே எப்படி சேர்ந்துவிடுமோ
அதுபோல சிறந்தவழியில் நடக்கும் சான்றோரின் கோபம் உடனே மறைந்து கூடுவர்.
(கருத்து – மூடர்கள் கோபம் கொண்டால்
எப்பொழுதும் கூட மாட்டார்கள். நடுத்தரமானவர்கள் யாராவது கூட்டினால்
கூடிவிடுவார்கள். அறிஞர்கள் தாமாகவே கூடிவிடுவார்கள் என்பதாம்)
No comments:
Post a Comment