24.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 17



அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

விளக்கம்.

நீர் வற்றியதும், குளத்திலிருந்து நீங்கிவிடும் நீரில் வாழும் பறவைகளைப் போல துன்பம் வந்த போது நீங்கி விடுபவர்கள் சுற்றத்தார் ஆக மாட்டார்கள். அந்தக் குளத்திலுள்ள கொட்டிப்பூண்டையும், அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போன்றவர்களாக சேர்ந்து, (நீர் ஏற உயர்ந்தும், நீர் குறையத் தாழ்ந்தும் இருத்தல் போல) இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே நல்ல சுற்றத்தவர் ஆவார்கள்.
(கருத்து – இன்பக் காலத்தும், துன்பக் காலத்தும் இசைந்து சேர்ந்து இருப்போரே சிறந்த சுற்றத்தார் ஆவார் என்பதாம்.)

3 comments:

  1. சுற்றம் பற்றி சொன்னவிதம் உண்மைதான்

    ReplyDelete
  2. அந்த கொடியை போன்ற உறவாக இருக்க வேண்டும்

    ReplyDelete