அடக்க முடையார் அறிவில ரென்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு
வாடி யிருக்குமாம் கொக்கு.
விளக்கம்.
நீர்க்கரையின் இடத்திலே நீரில் பாயும் சிறு மீன்கள், பாய்ந்து கொண்டே இருக்க
பெரிய மீன் வரும் வரையில் கொக்கானது சோர்ந்து சும்மா இருப்பது போல, அடக்கத்தை மேற்கொண்டவரை
புத்தியிலாதவர் என்பதாக நினைத்து அவரை வெல்ல நினைக்க வேண்டியதில்லை.
(கருத்து – அடங்கி இருப்பவர்களை, ஆராய்ந்தறியாமல், அறிவில்லாதவர்கள் என்று
தீர்மானித்து விடலாகாது என்பதாம்.)
No comments:
Post a Comment