வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகார மானாற்போல் – பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரங்
கல்லின்மேல் இட்ட கலம்.
விளக்கம்.
உடலில் கீற்றுக்களையுடைய வேங்கையென்னும் புலியினிடம் நோயைப் போக்கிய
விஷவைத்தியன் அங்கு வந்தாலும் அப்புலிக்கு உணவாகி விடுவான். (அது போல) நன்மையை உணர
முடியாத அற்பமான அறிவினையுடையவர்க்கு ஒருவனால் செய்யப்பட்ட உதவியும் கல்லின் மீது
போடப்பட்ட மண்ணாற் செய்த பாண்டம் போல் அழிந்துவிடும்.
(கருத்து – தீயவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதாம்)
No comments:
Post a Comment