25.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் -18



சீரியர் கெட்டாலும் சீரியர் சீரியரே
அல்லாதார் கெட்டாலும் அல்லாதார் – அல்லாதார்
பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.

விளக்கம்.

உயர்ந்த பொன்னால் செய்த குடமானது உடைந்துவிட்டால், அது பொன்னாகவே பின்பும் பயன்படும். ஆனால் மண்ணால் செய்யப்பட்ட குடமானது உடைந்துவிட்டால் பயன்படாது. (அதுபோல) மேலோர் செல்வத்தில் குறைந்தாலும் குணத்தால் மேலோராகவே இருப்பர். மேலோர் அல்லாதவராகிய கீழோர், செல்வத்தால் குறைந்தால் கீழோர் கீழோரே ஆவார்.

(கருத்து – மேலோர் செல்வ நிலையிலும், வறுமை நிலையிலும் பயன்படுவர். கீழோர் செல்வ நிலையில் மட்டுமே பயன்படுவார் என்பதாம்)

No comments:

Post a Comment