ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடனீர்
நாழி முகவாது நானாழி – தோழீ
நிதியும் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன்.
விளக்கம்.
தோழியே, ஆமாகிய கடலிலேயுள்ள நீரை அழுத்தி மொண்டாலும் நான்குபடி நீரை ஒருபடி
மொள்ளாது. (அதுபோல) செல்வமும், ஆளத்தக்க தலைவனும் அமைந்திருந்தாலும் அவரவருடைய
முற்பிறவியில் செய்த வினையின் பயனுக்கு ஏற்ற அளவே பலன் பெற முடியும்.
(கருத்து – செல்வம் அடைந்து, அச்செல்வத்திற்குத் தக்க தலைவனும் அமைந்தாலும்
நினைத்தபடியே அனுபவித்து விடமுடியாது. விதிக்கீடாகவே அனுபவிக்க முடியும் என்பதாம்)
No comments:
Post a Comment