உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.
விளக்கம்.
கூட பிறந்தவர்கள் உறவினர்கள் என நினைத்து அவர்களை நம்பிவாழ வேண்டியதில்லை. நோயானது
மனிதன் உடலிலேயே பிறந்ததாக இருந்தே கொன்றுவிடும். நம்மொடு பிறக்காதாகிய பெரிய
மலையிடத்துள்ள இலை, கொடி முதலிய மருந்துகளே நோயை போக்கும். (அதுபோல) அந்த மருந்தை
ஒத்தவர்களும் (ஆதாவது உடன்பிறவாத மற்றவர்களும்) நம் துன்பத்தைப் போக்குவர்களும்
உள்ளனர்.
(கருத்து – நமக்குச் சம்பந்தம் உள்ளவர்களில் தீமை செய்வோரும், அயலார்களில்
நன்மை செய்வோரும் உண்டு என்பதாம்)
No comments:
Post a Comment