நற்றாமரைக் கயத்தில்நல் லன்னம் சேர்ந்தாற்போற்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் –
கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்
முதுகாட்டில்
காக்கை யுகக்கும் பிணம்.
விளக்கம்.
நல்ல தாமரைப் பூக்கள் நிறைந்த
குளத்தில் சிறந்த அன்னப்பறவைகள் சேர்ந்து வாழ்வதைப் போல கற்ற அறிஞர்களை விரும்பிச்
சேர்ந்து வாழ்வார்கள் கற்றவர்கள். சுடுகாட்டில் உள்ள பிணத்தை காக்கையானது
விரும்புவதைப்போல முரடர்களை முரடர்களே விரும்பவர்.
(கருத்து – நல்லவர்களை நல்லவர்களே
விரும்புவர். கெட்டவர்களைக் கெட்டவர்களே விரும்புவர் என்பதாம்)
No comments:
Post a Comment