எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம் – கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக்
காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.
விளக்கம்.
வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே,
நல்லதையே நினைத்துச் சென்று கற்பக மரத்தை அடைந்தவர்களுக்கும் எட்டிக்காயை அம்மரம்
கொடுத்ததேயானால் அது (அவர்) போன பிறப்பில் செய்ததாகிய செய்கையின் பலனாகும். ஆதலால்
ஒவ்வொரு செயலும் நீ நினைத்த விழியே கூடிவருவதும் கூடாத்தும் பிரமன் விதித்த
வழியின்படியே நடக்கும்.
(கருத்து – ஒவ்வொரு செயலும் அவரவர்கள்
விதியின் படியே நடக்கும் என்பதாம்.)
No comments:
Post a Comment