இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.
விளக்கம்.
நல்ல மனைவி வீட்டில் அமைந்தால், ஒருவனுக்கு இல்லையென்று சொல்லத்தக்க ஒரு
பொருளும் கிடையாது. மனைவியானவள் கடுமை பொருந்திய பேச்சை பேசுவாளானால் அந்த வீடானது
புலியானது தங்கியுள்ள புதராக ஆகும்.
(கருத்து - நல்ல குணமுடைய மனைவியுள்ள
வீடு எல்லாச் சிறப்பும் உடையதாக இருக்கும். கொடிய மனைவியுள்ள வீடு பலியின் புதரைப்
போல எல்லாருக்கும் பயத்தைக் கொடுக்குமாம்)
அருமையான பகிர்வு
ReplyDeleteதொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
வாழ்த்துக்களுடன்...
tha.ma 2
ReplyDeleteMiga sariyana Varthaigal
ReplyDelete