30.10.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 28



சந்தனம் மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா தாதலால் – தந்தம்
தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கேட்டால்
மனஞ்சிறிய ராவரோ மற்று.

விளக்கம்.

சந்தனமர கட்டையைத் தேய குறைபட்டாலும் அதன் வாசனையில் குறையாது. ஆகையால் மாலையணிந்த அரசர்கள் தங்கள் தங்களுடைய செல்வத்திலே குறைந்தவர்கள் ஆனாலும் மனத்தின் தன்மையிலே குறைந்தவர் ஆவார்களோ? (ஆகமாட்டார்)


(கருத்து – சிறந்தவர்கள் செல்வம் குறைந்தபோதும் மனத்தின் நல்ல தன்மையிற் குறைய மாட்டார்கள் என்பதாம்)

5 comments:

  1. வணக்கம்
    பாடலும் விளக்கமும் நன்று .... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான பாடலும்
    அதற்கான எளிய அற்புதமான விளக்கமும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மிக மிக நல்ல பதிவு!
    தொடர்ந்து எழுதுங்கள்.

    தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1

    ReplyDelete
  4. it is very nice

    ReplyDelete