சந்தனம் மென்குறடு தான்தேய்ந்த
காலத்தும்
கந்தம் குறைபடா தாதலால் – தந்தம்
தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர்
கேட்டால்
மனஞ்சிறிய ராவரோ மற்று.
விளக்கம்.
சந்தனமர கட்டையைத் தேய குறைபட்டாலும்
அதன் வாசனையில் குறையாது. ஆகையால் மாலையணிந்த அரசர்கள் தங்கள் தங்களுடைய
செல்வத்திலே குறைந்தவர்கள் ஆனாலும் மனத்தின் தன்மையிலே குறைந்தவர் ஆவார்களோ?
(ஆகமாட்டார்)
(கருத்து – சிறந்தவர்கள் செல்வம்
குறைந்தபோதும் மனத்தின் நல்ல தன்மையிற் குறைய மாட்டார்கள் என்பதாம்)