15.10.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 26




மன்னனும் மாசறக் கற்றேனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் – மன்னனுக்குத்
தன்றேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாஞ் சிறப்பு.

விளக்கம்.

அரசனையும் குற்றங்கள் இல்லாமல் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் அரசனைக் காட்டிலும் படித்தவனே மேன்மை உடையவன் ஆவான். மன்னவனுக்கு தனது நாட்டில் அல்லாத வேறு நாட்டில் பெருமை இல்லை. ஆனால் படித்தவருக்குப் போகும் இடத்திலெல்லாம் பெருமை கிடைக்கும்.

(கருத்து – அரசனைப் பார்க்கிலும் புலவரே சிறந்தவராவார் என்பதாம்)

3 comments:

  1. வணக்கம்
    ஔவையாரின் மூதுரை விளக்கம் நன்று பதிவும் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. எளிய அருமையான விளக்கத்துடன் கூடிய
    தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete