நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு –
நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
விளக்கம்.
நல்ல பாம்பானது விடத்தை
வைத்திருந்தலைத் தானே தெரிந்தும் மறைந்து வாழும். விடமில்லாத நீரிப்பாம்பானது
பயப்படாமல் வெளியில் வாழும். (அதுபோல) மனத்திலே வஞ்சகம் உடையவர்கள் தங்களை மறைத்து
வாழ்வார்கள். வஞ்சகம் இல்லாத மனத்தை உடையவர் தங்களை மறைத்து வாழ மாட்டார்.
(கருத்து – வஞ்சகம் உள்ளவர்கள்
யாரோடும் கூடாமல் மறைந்து வாழ்வார்கள். வஞ்சகம் இல்லாதவர்கள் எல்லோரோடும் கூடி
வாழ்வார்கள் என்பதாம்)
வணக்கம்
ReplyDeleteவஞ்சகம் உடையவர்கள் தங்களை மறைத்து வாழ்வார்கள். வஞ்சகம் இல்லாத மனத்தை உடையவர் தங்களை மறைத்து வாழ மாட்டார்
ஔவையாரின் மூதுரை விளக்கம் அந்த காலத்தில் சொன்னது இந்தகாலத்துக்கும் பயனுடையாதாக உள்ளது பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-