9.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 9



தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயோர்சொல் கேட்பதுவும் தீதே – தீயோர்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ
டிணங்கி யிருப்பதும் தீது.

விளக்கம்.

கெட்டவரைப் பார்ப்பதும் கெட்டதே. சிறப்பு இல்லாத கெட்டவருடைய சொற்களைக் கேட்பதும் கெட்டதே. கெட்டவருடைய குணங்களைப் பற்றி பேசுவதும் கெட்டதே. அக்கெட்டவரோடு கூடி வாழ்ந்திருப்பதும் கெட்டதாகும்.
(கருத்து – கெட்டவர்கள் சம்பந்தமான எல்லாம் கெடுதியே தரும்)

No comments:

Post a Comment