நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே யவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று.
விளக்கம்.
நல்லவரைப் பார்ப்பதும் நல்லதே. நல்லவரின் சொற்களைக் கேட்பதுவும் நல்லதே. நல்லவரது
குணங்களைப் புகழ்ந்து பேசுவதும் நல்லதே. அந்த நல்லவருடன் கூடி வாழ்ந்திருப்பதும்
நல்லதாகும்.
(நல்லவருடன் சேர்ந்து எது செய்வதாலும் நன்மையையே நல்குமாம்)
No comments:
Post a Comment