9.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 10



நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.

விளக்கம்.
நெற்பயிருக்காக இறைக்கப்பட்ட நீரானது கால்வாயின் மூலமாக சென்று அக்கால்வாயின் கரையிலுள்ள தாழ்ந்த புல்லினுக்கும் தந்து போகும். (அதுபோல) பழமையான உலகத்திலே நல்லவராக ஒரு மனிதர் இருப்பாரானால் அவருக்காக பெய்கின்ற மழையானது நல்லவரல்லாத அனைவருக்கும் பயன் தருகிறது.
(கருத்து – நல்லவரைச் சேர்ந்த கெட்டவர்களும் பயனடைவார்கள் என்பதாம்)

No comments:

Post a Comment