11.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 11



பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம் – கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல்.

விளக்கம்.

அரிசியானது, உமி நீங்குதற்கு முன்பு முளைக்கக் கூடியதாய் இருந்தது. அப்படியிருந்தாலும் அவ்வரிசியைச் சேர்ந்த உமியானது நீங்கி போய்விட்டால் அவ்வரிசி முளைக்காது. (அதுபோல) பெரிய வலிமை உடையவர்களுக்கும் துணை இல்லாது போனால் எடுத்துக்கொண்ட காரியங்களைச் செய்வது முடியாது.
(கருத்து – எவ்வளவு வலிமையிருந்தாலும் அது துணையில்லா விட்டால் பயன்படாது என்பதாம்)

No comments:

Post a Comment