4.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 6



உற்ற விடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ – கற்றுர்ண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.

விளக்கம்.

கல்லினால் செய்யப்பட்ட தூண் பெரிய சுமையை சுமக்க நேர்ந்தால் வெடித்து இடிந்து விழுமே தவிர வளைந்து கொடுக்குமோ? (அதுபோல) இழிவு உண்டான இடத்திலேயே உயிரைவிடும் மானம் பொருந்திய குணமுள்ளவர்கள், தமது பகைவர்களைப் பார்த்தால் வணங்குவார்களோ? (மானமுள்ளவர்கள் பகைவனை வணங்கி உயிர் வாழமாட்டார்கள் என்பதாம்)

No comments:

Post a Comment