3.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 5



அடுத்து முயன்றாலும் ஆகுநா ளன்றி
எடுத்து கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

விளக்கம்.

விரிந்த வடிவத்தால் நீளமான மிக உயர்ந்த மரங்கள் யாவும் பழுக்கவேண்டிய காலத்தில் அல்லாமல் பழுக்காது. (அதுபோல) எவ்வளவு தான் தொடர்ந்து முயற்சி செய்தாலும் கூடி வரவேண்டிய காலம் அல்லாமல் தொடங்கிய காரியங்கள் கூடிவராது.
(ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவோர் அதைத் தகுந்த காலம் அறிந்து தொடங்க வேண்டும் என்பதாம்)

No comments:

Post a Comment