அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
விளக்கம்.
பாலானது காய்ச்சப்பட்டாலும் சுவையில் குறையாது. சங்கானது சுடப்பட்டாலும்
நிறங்குறையாமல் வெண்மை நிறத்தையே கொடுக்கும். (இவைபோல) உயர்குடியில் பிறந்த மேலோர்
செல்வத்தால் குறைந்தாலும் குணத்தால் மேலோராகவே இருப்பார். நண்பராவதற்குத்
தகுதியற்றவரோ நிலைமையோடு கலந்து எவ்வளவு நாள் சேர்ந்திருந்தாலும் நண்பராக
ஆகமாட்டார்.
(பாலும் சங்கும் மேன்மக்களுக்கு உவமை)
No comments:
Post a Comment