28.6.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 3




இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் – இன்னாத
நாளல்லா நாள்பூத்த நன்மலரும் போலும்
ஆளில்லா மங்கைக் கழகு.
  
விளக்கம்.

வறுமையாளன் ஒருவனுக்கு இன்பம் தரக்கூடிய இளமைப்பருவமும், வயது முதிர்ந்தவனுக்கு, இன்பம் தரக்கூடிய பொருள்களும் துன்பத்தைத் தருவனவாகும். (அவை) காலம் அல்லாத மறுபட்ட நேரத்தில் மலர்ந்த மலரைப்போலவும், கணவன் இல்லாத பெண்ணிடத்தில் உள்ள அழகைப் போலவும் ஆகும். (பயன் படாமல் போகும் என்பதாம்)

27.6.2013

No comments:

Post a Comment