23.6.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 2



நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போற்காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்.

விளக்கம்.

நல்லவராகிய ஒரு மனிதருக்கு செய்யப்பட்ட உதவியானது கல்லின் மேல் செதுக்கப்பட்ட எழுத்தைப் போல நிலைத்திருக்கும். நல்லவர் அல்லாதவராகிய கருணை இல்லாத மனத்தையுடைய ஒருவருக்குச் செய்யப்பட்ட உதவியானது நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பாகும். (அதாவது உடனே மறைந்து விடும் என்பதாம்)

22.6.2013

No comments:

Post a Comment