14.6.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 1




1.
நன்றி யொருவற்குச் செய்தகால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

விளக்கம்.

நல்லவன் ஒருவனுக்கு நீ ஓர் உதவி செய்தால், அவன் அதனை உனக்குத் திருப்பிச் செய்வானோ என்று கவலை கொள்ள வேண்டாம். (நின்று) நிலைத்து, வாடாமல் வளர்ந்த தென்னை மரமானது வேரினில் ஊற்றிய நீரை ஏற்றுக்கொண்டு அதனை தலையில் சுமந்து இளநீராகக் கொடுப்பது போல், அவன் நீ செய்த உதவியை விட சிறந்த உதவியை உனக்குக் கட்டாயம் செய்தே தீருவான்.

No comments:

Post a Comment