17.10.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 27




கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் – மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.

விளக்கம்.

படிக்காத மக்களுக்குப் படித்து அறிந்தவர்களின் சொல்லானது எமன் போன்றதாகும். நேர்வழி வாழாதவர்க்கு தரும தேவதையே எமனாகும். மென்மையான வாழை மரத்திற்கு தான் பெற்ற காயே எமனாகும். இல்லத்தில் பொருந்தி வாழாத பெண்ணுக்கு அப்பெண்ணே அவளுக்கு எமனாவாள்.

(கருத்து – மூடர்களுக்கு அறிஞர்கள் சொல் துன்பத்தைத் தரும். பாவிகளுக்கு அறமே துன்பத்தைத் தரும். வாழைக்கு அதன் காயே துன்பத்தைத் தரும். வீட்டிற்கு அடங்கி நடக்காத பெண் துன்பமடைவாள் என்பதாம்)

3 comments:

  1. வணக்கம்
    பதிவு அருமை ஔவையின் பாடல்கள் அந்தனையும் நன்றுவாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. காலைப்பொழுது முதல் பதிவாக
    தங்கள் அருமையான கருத்துரையுடன் கூடிய
    மூதுரையைப் படித்து மகிழ்ந்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete