17.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 14


கான மயிலாடக் கண்டிருந்த வான்கொழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

விளக்கம்.

நூல்களைப் படிக்காதவன், மற்றவர்கள் படிக்கும் போது அதைப் பார்த்து அரை குறையாகக் கற்றுக்கொண்டு பாட்டைப் பாடுவது, காட்டிலே மயிலானது தனது அழகிய தோகையை விரித்து ஆடிக்கொடிருக்க, அதைப்பார்த்துக் கொண்டு பக்கத்திலேயிருந்த வான்கோழியானது தன்னையும் அம்மயில் என நினைத்துத் தன்னுடைய விகாரமான இறக்கைகளைப் பரப்பி ஆடினதை ஒக்கும்.

(கருத்து – கல்வியறிவில்லாதவன் கற்றவர்களைப் போல் நடிப்பது கூடாது என்பதாம்)

1 comment:

  1. Varigal Naangayinum porul panmadangu.. Miga aruputham

    ReplyDelete