12.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 12



மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா – கடல்பெரிது
மண்ணீரும் ஆகா ததனருகே சிற்றுர்றல்
உண்ணீரும் ஆகி விடும்.

விளக்கம்.

இதழால் பெரிய தாழை வாசனையற்றது.  இதழால் மிகச் சிறிய மகிழமலர் வாசத்தால் சிறந்தது. கடலானது அளவால் பெரியது என்றாலும் குடிநீராகாது. அப்பெரிய கடலின் அருகில் இருக்கும் அளவில் சிறிய ஊற்று நீரானது உண்பதற்கு உரியது. (ஆகையால்) ஒருவர் உடம்பால் சிறியராயிருக்கின்றார் என்பதைக் கொண்டு அவர்மேல் அவமதிப்பான எண்ணங்கொண்டு இருக்க வேண்டியதில்லை.
(கருத்து – உடம்பின் தோற்றத்தைக் கொண்டு ஒருவரை மதிப்பிடக் கூடாது என்பதாம்)
தாழை – தென்னை.

2 comments:

  1. ஆஹா...அற்புதமான கருத்துக்கள்

    ReplyDelete