16.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 13



கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சபைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவனன் மரம்.

விளக்கம்.

கிளைகளையும் கொம்புகளையும் உடைய நன்கு வளர்ந்தும், காட்டின் நடுவில் நின்றிருக்கும் மரங்கள் சிறந்தவை அல்ல. (அதுபோல) அறிஞர்களின் கூட்டத்தின் இடையில் கையில் கொடுத்த ஏட்டை படிக்க முடியாமல் நின்றவனும், ஒருவன் கருத்தின் அடையாளத்தைத் தெரிந்துகொள்ள முடியாதவனும் சிறந்தவன் அல்ல.
(கருத்து – கல்வி அறிவில்லாதவனும் பிறர் கருத்தின் குறிப்பை உணராதவனும் மரங்களுக்குச் சமம் என்பதாம்)

13 comments:

  1. புதியத் தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. இது சரியான பொருள் கிடயாது...

      Delete
  2. அவசியமானதொரு பதிவு, வாழ்த்துகள்

    ReplyDelete
  3. உங்களது மூதுரை விளக்க முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது . மேலும் , இது போன்ற தகவல்களை தர வேண்டிகொள்கிறேன் . எனினும் , ஒரு சிறிய மாற்று கருத்து பின்வருமாறு :

    கவையாகிக் கொம்பாகிக் காட்டில் நிக்கும் மரங்கள் மரங்களல்ல . சபை நடுவே , குறிப்பரியாமல் நிற்கும் எவனோருவனும் மரமாக கருதபடுவான் என்பதே சரியான விளக்கமாக எனக்கு தோன்றுகிறது .

    இக்கருத்துக்கு சரியெனபட்டால், ஏற்று கொள்ளுங்கள். இல்லை எனினும், நன்று. மீண்டும் , பாராட்டுக்கள் .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துதான் சரியெனவே எனக்கும் தோன்றுகிறது.

      உதாரணமாக... அவ்வையார் காலத்தில் அவை என்பதே அரசவை மட்டுமே அல்லது புலவர்கள் கூடி விவாதிக்கும இடம். மிக நீளமான (நீட்டோலை) வாசிக்க இயலாமல் நின்றவனை மரம் என்று சொல்ல இயலாது அங்கு அனுமன் சொன்னது போல ரத்தின சுருக்கமாய் சொல்ல வேண்டுமேயன்றி அவையின் குறிப்பு அறியாமல் முழு ஒலையையும் வாசித்து காட்டுவது மரத்திற்கு சமமானது.

      Delete
  4. thanq sir it's very useful for e

    ReplyDelete
  5. மூதுரைக்கு எழுதப்பெற்ற இவ்வுரை விளக்கங்கள் எளிமையாக உள்ளன. இருப்பினும் பழைய உரைகளைப் போற்றுதல் நலம் பயக்கும்.

    ReplyDelete
  6. வாசியா நின்றான்.... இதன் பொருள் வாசிக்காமல் நின்றான் என்பதல்ல... அறிவு ஞானத்தையே வாசியாக கொண்டு எல்லோரும் மெச்சும் வண்ணம் நின்றான் என்பதாகும், வாசியோகத்தால் ஞானத்தை வெளிப்படுத்தும் நிகழ்வே நீட்டோலை ஆகும்!

    ReplyDelete
  7. அது அவ்வை பிராட்டி சொன்னாலும் தவறு தவறு தான் ! கற்றலின் கேட்டல் நன்று ! பிறரது கருத்தை புரியாமல் போனதற்று காரணம் இவனல்ல ! அந்த கருத்தை கூறியவரின் விளக்கம் சராயாக இல்லை என்று தான் அர்த்தம் ! மேலும் இது மரங்களை மிகவும் அவமதிப்பதாகும் ! அவை பேசாமலேயே பல நற்செயல்கள் புரிகின்றன !
    நான் அவ்வையை விட அறிவாளி என இங்கு கூறவில்லை ! எதையும் கேள்வி கேட்டு பதில் வாங்கி புரிந்து கொள்ளும் எனது முயற்சி என்று கொள்க 🙏

    ReplyDelete
  8. அது அவ்வை பிராட்டி சொன்னாலும் தவறு தவறு தான் ! கற்றலின் கேட்டல் நன்று ! பிறரது கருத்தை புரியாமல் போனதற்று காரணம் இவனல்ல ! அந்த கருத்தை கூறியவரின் விளக்கம் சரியாக இல்லை என்று தான் அர்த்தம் ! மேலும் இது மரங்களை மிகவும் அவமதிப்பதாகும் ! அவை பேசாமலேயே பல நற்செயல்கள் புரிகின்றன !
    நான் அவ்வையை விட அறிவாளி என இங்கு கூறவில்லை ! எதையும் கேள்வி கேட்டு பதில் வாங்கி புரிந்து கொள்ளும் எனது முயற்சி என்று கொள்க 🙏

    ReplyDelete
  9. அது அவ்வை பிராட்டி சொன்னாலும் தவறு தவறு தான் ! கற்றலின் கேட்டல் நன்று ! பிறரது கருத்தை புரியாமல் போனதற்கு காரணம் இவனல்ல ! அந்த கருத்தை கூறியவரின் விளக்கம் சரியாக இல்லை என்று தான் அர்த்தம் ! மேலும் இது மரங்களை மிகவும் அவமதிப்பதாகும் ! அவை பேசாமலேயே பல நற்செயல்கள் புரிகின்றன !
    நான் அவ்வையை விட அறிவாளி என இங்கு கூறவில்லை ! எதையும் கேள்வி கேட்டு பதில் வாங்கி புரிந்து கொள்ளும் எனது முயற்சி என்று கொள்க 🙏

    Reply

    ReplyDelete